Categories
News

சர்வதேச மகளிர் தினம் மற்றும் பிறந்தநாள் நிகழ்வு

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் சர்வதேச மகளிர் தினம் மற்றும் தை ,மாசி மாதங்களில் பிறந்தநாள் கொண்டாடும் எமது இல்ல பிள்ளைகளின் பிறந்தநாள் நிகழ்வு என்பன 08.03.2025 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இல்ல தலைவர் திரு ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி ஜெயராணி பரமோதயன் செயலாளர் சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் சிறுவர் நன்னடத்தை பாதுகாவல் அமைச்சு, வடக்கு மாகாணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி நளாயினி இன்பராஜ் மேலதிக அரசாங்க அதிபர்.காணி , கிளிநொச்சி அவர்கள் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள், இல்ல பணிப்பாளர்கள் , பணியாளர்கள் இல்லக்குழந்தைகள் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர் .
மேலும் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தரால் மகளிர் உரிமை பற்றிய மகளிர் தின சிறப்புரை இடம்பெற்றது . அத்துடன் மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனைப் பெண்களுக்கான கெளரவிப்பும் விருந்தினர் கெளரவிப்பும் இடம்பெற்றதுடன் பிறந்தநாள் கொண்டாடிய குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டதுடன் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. . அதன் பதிவுகள் சில

Categories
News

பரீட்சை அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு 07.03.2025

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திலிருந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதரண தரத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வையிட்டு 07.03.2025 அன்று எமது மாகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல சர்வசக்தி அம்மன் ஆலயத்தில் பொங்கள் நிகழ்வுகளுடன் பூஜை இடம்பெற்று பின்னர் குழந்தைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் இல்ல தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எமது இல்ல பணிப்பாளர்கள் , பணியாளர்கள் , கலந்து கொண்டு பிள்ளைகளை வாழ்த்தி ஆசி வழங்கினர் அதன் பதிவகள் சில.

Categories
News

பூப்புனித நீராட்டு விழா

2024ஆம் ஆண்டு பூப்புனித நீராட்டு விழா செய்யப்பட வேண்டிய எமது இல்ல பிள்ளைகள் 8 பேருக்கான பூப்புனித நீராட்டு விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக சமய சம்பிரதாய கலாச்சார விழுமியங்களுக்கேற்ப சுப நேரத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில் இல்லத்தின் நலன்விரும்பிகள், நன்கொடையாளர்கள், திணைக்களங்களுடைய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் இல்லத்தினுடைய குழந்தைகள் பணியாளர்கள், பணிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் குழந்தைகளுக்கு வாழ்த்துகளையும் ஆசிர்வாதத்தினையும் வழங்கி மகிழ்ந்திருந்தனர்

இந் நிகழ்விற்கு சகல வழிகளிலும் நிதி உதவிகளையும் ஆதரவினையும் வழங்கியிருந்த நல் உள்ளம் கொண்ட எம் நன்கொடையாளர்களுக்கு எமது இதய பூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களினையும் இல்ல குழந்தைகள் சார்பாக தெரிவித்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்

அதன் பதிவுகள் சில

Categories
News

தைப்பொங்கல் விழா( 14.01.2025)

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பிரதான அலுவலகம், மேற்பிரிவு மகளிர் இல்லம்,ஆரம்பபிரிவு மகளிர் இல்லம் மற்றும் எமது ஆண்கள் இல்லம் ஆகியவற்றில் பொங்கல் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது அதன் பதிவுகள் சில

.

Categories
News

வருட இறுதி பணியாளர் ஒன்று கூடல் 11.01.2025

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2024ம் ஆண்டின் வருட இறுதி பணியாளர் ஒன்று கூடல் நிகழ்வானது 11.01.2025 அன்று கிராஞ்சி இராசநாயகம் தென்னம் தோப்பில் பணியாளர் சங்க தலைவர் திரு .தே . சுபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது .இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் தலைவர் திரு ச. மோகனபவன் அவர்களும் விருந்தினர்களாக சிரேஸ்ர உப தலைவர் திரு. அ. கனகரத்தினம் அவர்களும் திருமதி கிருபா ஜெயக்குமார் முகாமைக்குழு உறுப்பினர் அவர்களும் கலந்து கொண்டதுடன் கதாநாயகர்களாக இல்ல பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் எமது இல்ல பணியாளர்களை கெளரவிக்கும் முகமாக நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் போட்டிகளும் இடம்பெற்றன

Categories
News

முகாமைக்குழுக்கூட்டம் 13.01.2024

முகாமைக்குழுக்கூட்டம் 13.01.2024

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த முகாமைக்குழுக்கூட்டம் இல்லத்தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலைமையில். 13.012024 காலை 10.00மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது
குறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றது இல்லத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்துதல் தொடர்பாகவும் முக்கியமான ஆலோசனை களுடனான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன அதன் பதிவுகள் சில

Categories
News

வருடாந்த கல்விச்சுற்றுலா 28.12.2024

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கான வருடாந்த கல்விச் சுற்றுலாவானது 28 .12. 2024 அன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு
மாவட்டத்தில் பிரதான வழிபாட்டு தலமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம், அவலோன் சுற்றுலா மையம் ஆகிய இடங்கள் இதன் போது பார்வையிட்டிருநந்தன மேலும் இச் சுற்றுலாவில் இல்ல தலைவர் , பணிப்பாளர்கள் பணியாளர்கள், மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு இச் சுற்றுலாவில் இல்லக் குழந்தைகள் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பங்கு பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது

வருடாந்த கல்விச்சுற்றுலா

Categories
News

ஒளிவிழா மற்றும் பிறந்தநாள் நிகழ்வு 22. 12.2024

ஒளிவிழா மற்றும் பிறந்தநாள் நிகழ்வு 22. 12.2024
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஒளிவிழா மற்றும் கார்த்திகை மார்கழி மாதங்களில் பிறந்தநாள் கொண்டாடும் பிள்ளைகளின் பிறந்தநாள் நிகழ்வு என்பன 22 .12. 2024 அன்று மேற்பிரிவு மகளிர் இல்ல மண்டபத்தில் பிற்பகல் 3 மணியளவில் இல்ல தலைவர் திரு ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் அருட்தந்தை அ. யோன் கனிசியுஸ் அடிகளார் பங்குத்தந்தை உருத்திரபுரம் அவர்களின் பங்குபற்றுதலுடனும் அவர்தம் ஆசியுடனும் நிகழ்வு ஆரம்பமானது.
இந்நிகழ்வில் எமது இல்ல சிரேஸ்ர உபதலைவர் , முகாமைக்குழு உறுப்பினர்கள் , இல்லக் குழந்தைகள், பணிப்பாளர்கள் , பணியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்
பிறந்தநாள் கொண்டாடிய குழந்தைகளுக்கு இனிப்பூட்டி வாழ்த்தி மகிழ்வதோடு பரிசில்களும் வழங்கப்பட்டன அத்தோடு ஒளி விழாவை சிறப்பிக்கும் முகமாக கிறிஸ்துமஸ் தாத்தா வருகைதந்து குழந்தை களை மகிழ்வித்தார் . அத்தோடு இல்ல குழந்தைகளின் கலை நிகழ்வுகம் இடம்பெற்றது.
அதன் பதிவுகள் சில ❤️❤️❤️❤️❤️
Categories
News

கார்த்திகைத் தீபத்திருநாள் 14.12.2024

(14.12 .2024) நேற்றைய தினம் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல சிறார்களால் கார்த்திகைத் தீபத்திருநாள் தீபங்கள் ஏற்றி மகிழ்வுடன் கொண்டாடப்பட்டதன் பதிவுகள்

Categories
News

மாவட்ட மட்ட கராத்தே போட்டி 08.12.2024😍

மாவட்ட மட்ட கராத்தே போட்டி 08.12.2024😍

, 08.12.2024. அன்று இலங்கை கராத்தே சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி பொது உள்ளக விளையாட்டரங்கில் மாவட்ட மட்ட கராத்தே போட்டிகள் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்ட எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல கராத்தே அணியினர் சிறப்பாக செயற்பட்டு சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டனர்.
தங்கம் -10
வெள்ளி – 06
வெண்கலம் – 04
மேலும் இப்போட்டியில் தங்கம் , வெள்ளி பெற்ற 16 மாணவர்கள் தேசிய போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது