வடமாகாண சிறுவர் பராமிப்பு மற்றும் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தினால் வட மாகாணத்தில் உள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலும் 2023ம் ஆண்டினை மையப்படுத்தி பிள்ளைகளின் அபிவிருத்தி சார்ந்து மேற்கொள்ளப்பட்ட விடயங்களினை அதாவது இல்லத்தில் பிள்ளைகளின் கல்விச் செயற்பாட்டின் மூலம் பெற்றுள்ள உயர்ந்த அடைவு, அவர்களது சுகாதாரம், திறன் விருத்தி செயற்பாடுகள், தொழிற்பயிற்சி நடவடிக்கைகள், கலை கலாச்சாரம், மகிழ்வூட்டல் செயற்பாடுகள், நிறுவனத்தின் சூழல், உணவு, உடை மருத்துவ வசதிகள், விளையாட்டுப் பயிற்சிகள், சாதனைகள், சமய அனுட்டானங்கள், இல்லத்திலுள்ள முறையான பதிவேடுகளின் பேணுகை போன்ற பல்துறைசார் செயற்பாடுகளினையும் தனித்தனியாக ஆய்வு செய்து தரப்படுத்தும் முகமாக புள்ளிகள் இடப்பட்டு திணைக்களத்தால் நடாத்தப்பட்ட தரப்படுத்தல் அடிப்படையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று அதி சிறப்பு எனும் தரத்தில் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பெண்கள் பிரிவு மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் ஆண்கள் பிரிவு இரண்டாம் இடத்தினையும் பெற்று பெருமை சேர்த்துள்ளமையினையிட்டு பெருமகிழ்வடைகின்றோம். அதன் பதிவுகள் சில………..