Categories
News

பரீட்சை அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு 22.11.2024

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திலிருந்து 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வையிட்டு 22.11.2024அன்று எமது மாகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல சர்வசக்தி அம்மன் ஆலயத்தில் பொங்கள் நிகழ்வுகளுடன் பூஜை இடம்பெற்று பின்னர் குழந்தைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் இல்ல தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எமது இல்ல பணிப்பாளர்கள் , பணியாளர்கள் , ஆசிரியர்கள் கலந்து கொண்டு பிள்ளைகளை வாழ்த்தி ஆசி வழங்கினர். அதன் பதிவுகள் சில

Categories
News

இராசநாயகம் ஐயா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி நினைவு

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகரும் தந்தையுமாகிய அமரர் இமயம் உயர்திரு திருநாவுக்கரசு இராசநாயகம் ஐயா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி நினைவு நாளான 02.11.2024 அன்று மாலை 4:30 மணிக்கு இல்ல தலைவர் திரு ச. மோகனபவன் அவர்களின் தலைமையின் ஆரம்பமானது .
முதலில் இந்நிகழ்வையிட்டு எமது ஜெயந்திநகர் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நினைவுச் சுடரேற்றி மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து புதுமுறிப்பு சிறுவர் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு இல்ல தலைவர் ,முகாமைக்குழு உறுப்பினர்கள் , பணியாளர்கள் இல்ல குழந்தைகள் ,பழைய மாணவர்கள் ஆகியோரால் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அமரர் இராசநாயகம் ஐயா அவர்களின் தன்னலமற்ற சேவைகள் ,நற்பணிகள் தொடர்பாகவும் நினைவு பேருரைகள் மற்றும் இல்ல குழந்தைகளின் கவிதைகள், நினைவுப் பாடல்கள், என்பன நிகழ்த்தப்பட்டதுடன் உயர் திரு இராசநாயகம் ஐயா அவர்களின் நினைவை முன்னிட்டு இல்ல குழந்தைகளிடையே மேடைப்பேச்சு ,பாடல், கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது அதன் பதிவுகள் சில.

Categories
News

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் சிறுவர் தினம், ஆசிரியர் தினம் , சாதனை மாணவர்கள் கெளரவிப்பு மற்றும் மற்றும் ஆடி, ஆவணி, புரட்டாதி ,ஐப்பசி மாதங்களில் பிறந்தநாள் கொண்டாடும் பிள்ளைகளின் பிறந்த நாள் நிகழ்வுகள் என்பன 26 .10. 2024 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இல்லத் தலைவர்
திரு ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் எமது இல்ல வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி பிரதீபாகாயத்திரி கஜபதி வலயக்கல்வி பணிப்பாளர் தெற்கு வலயம் கிளிநொச்சி அவர்களும், சிறப்பு விருந்தினராக
திரு ப .கஜேந்திரன் கணக்காளர் மாவட்ட சமுர்த்தி அலுவலகம் கிளிநொச்சி அவர்களும் கௌரவ விருந்தினர்களாக
திரு இ. இராஜன் தலைமை காரியாலய உத்தியோகத்தர் சிறுவர் நன்னடத்தை திணைக்களம் வடக்கு மாகாணம் அவர்களும் திரு அ. ரெஜினோல்ட்ராஜ் நிலையைப் பொறுப்பு நன்னடத்தை உத்தியோகத்தர் மாவட்ட சிறுவர் நன்னடத்தை திணைக்களம் கிளிநொச்சி அவர்களும் விருந்தினர்களாக திருமதி மீனலோஜினி இதயசிவதாஸ் அதிபர் கிளிநொச்சி இந்து கல்லூரி அவர்களும் மற்றும் எமது இல்ல செயலாளர் ,இல்ல சிரேஸ்ர உபதலைவர், ,உபதலைவர் , இல்ல முகாமைக்குழு உறுப்பினர்கள், பணிப்பாளர்கள், பணியாளர்கள் இல்ல குழந்தை கலந்து சிறப்பித்தனர்.
மேலும் சாதனை மாணவர்களுக்கான கௌரவிப்பும் விருந்தினர் கௌரவிப்பும் இடம்பெற்றதுடன் பிறந்தநாள் கொண்டாடிய குழந்தைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டதுடன் இல்ல குழந்தைகளின் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்றது அதன் பதிவுகள் சில.

Categories
News

முகாமைக்குழுக்கூட்டம்

முகாமைக்குழுக்கூட்டம் 17.10.2024

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த முகாமைக்குழுக்கூட்டம் இல்லத்தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் இன்று 17.10.2024(வியாழக்கிழமை ) காலை 10 .30 மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது
குறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றது இல்லத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்துதல் தொடர்பாகவும் முக்கியமான ஆலோசனை களுடனான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன…..அதன் பதிவுகள் சில📸

Categories
News

விஜயதசமி பூஜை நிகழ்வுகள்.12.10.2024

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் நேற்றைய தினம் (12.10.2024) மேற்பிரிவுமகளிர் , ஆரம்ப பிரிவுமகளிர் மற்றும் முறிப்பு ஆண்கள் இல்லத்தில் விஜயதசமி பூஜை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றதுடன் புதிய மாணவர்களுக்கான வித்தியாரம்பம்.மற்றும் கலை பயிற்சி வகுப்புகள் கலைத்துறைசார் ஆசிரியர்களால் ஆரம்பிக்கப்பட்டன அதன் பதிவுகள் சில

Categories
News

வடமாகாண சிறுவர் பராமிப்பு மற்றும் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தினால் வட மாகாணத்தில் உள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலும் 2023ம் ஆண்டினை மையப்படுத்தி பிள்ளைகளின் அபிவிருத்தி சார்ந்து மேற்கொள்ளப்பட்ட விடயங்களினை அதாவது இல்லத்தில் பிள்ளைகளின் கல்விச் செயற்பாட்டின் மூலம் பெற்றுள்ள உயர்ந்த அடைவு, அவர்களது சுகாதாரம், திறன் விருத்தி செயற்பாடுகள், தொழிற்பயிற்சி நடவடிக்கைகள், கலை கலாச்சாரம், மகிழ்வூட்டல் செயற்பாடுகள், நிறுவனத்தின் சூழல், உணவு, உடை மருத்துவ வசதிகள், விளையாட்டுப் பயிற்சிகள், சாதனைகள், சமய அனுட்டானங்கள், இல்லத்திலுள்ள முறையான பதிவேடுகளின் பேணுகை போன்ற பல்துறைசார் செயற்பாடுகளினையும் தனித்தனியாக ஆய்வு செய்து தரப்படுத்தும் முகமாக புள்ளிகள் இடப்பட்டு திணைக்களத்தால் நடாத்தப்பட்ட தரப்படுத்தல் அடிப்படையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று அதி சிறப்பு எனும் தரத்தில் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பெண்கள் பிரிவு மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் ஆண்கள் பிரிவு இரண்டாம் இடத்தினையும் பெற்று பெருமை சேர்த்துள்ளமையினையிட்டு பெருமகிழ்வடைகின்றோம். அதன் பதிவுகள் சில………..

Categories
News

(06.10.2024)நேற்றைய தினம் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல திருவள்ளுவர் முன்பள்ளியின் சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற்றது அதன் பதிவுகள்

Categories
News

.03.10.2024 இன்றைய தினம் எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் மேற்பிரிவு, சிறிய மகளீர் இல்லத்தில் நவராத்திரி தினத்தை முன்னிட்டு கும்பம் வைக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது அதன் பதிவுகள் சில

Categories
News

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லப்பிள்ளைகளின் 2023(2024) க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள்….

Categories
News

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் ஆரம்பக்கல்வி முதல் கல்விகற்று 2023(2024) நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் எமது இல்லத்தின் பிள்ளைகள் பேராதனை, யாழ்ப்பாணம்,சப்ரகமுவ ஆகிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி இல்லத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

1-யோ.தனுசிகா:-பேராதனைப் பல்கலைக்கழகம்(UOP)

2-தே.ஜேனுசன் :-யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்(UOJ)

3-ம.செளந்தர்யா:-யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்(UOJ)

4.செ.ரேணுகா-சப்ரகமுவப் பல்கலைக்கழகம்

5.கி.கிருசாந்தி-சப்ரகமுவப் பல்கலைக்கழகம்

6.த. அன்பரசி – சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கை