2021 இற்கான பொருள் கணக்கெடுப்பின் பின்னரான ஏலவிற்பனை
Author: webadmin
பட்டிப்பொங்கல்
பட்டிப்பொங்கல் தினத்தையிட்டு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திலுள்ள பண்னணயில் பட்டிப்பொங்கல் நிகழ்வானது சிறப்பான முறையில் இடம்பைற்றது.
தைப்பொங்கல்
தைப்பொங்கல் தினத்தையிட்டு பிரதான அலுவலகம்,மேற்பிரிவு மகளிர் இல்லத்திலும் சிறிய மகளிர் மற்றும் புதுமுறிப்பு ஆண்கள் இல்லத்திலும் சிறப்பான முறையில் பொங்கல் நிகழ்வு
இடம்பெற்றது. அத்துடன் பாரம்பரிய விளையாட்டுக்களும் போட்டிகளும் குழந்தைகளுக்கும், பணியாளர்களுக்கும் நடாத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.
(2022) இவ்வருடத்திற்கான தைப்பொங்கள் தினத்தையொட்டி இல்ல குழந்தைகளிற்கிடையே பிரிவுகள் ரீதியாக கோலம் போடுதல்,மாலை கட்டுதல், கும்பம் வைத்தல் ஆகிய போட்டிகள் இன்றையதினம் நடாத்தப்பட்டு நடுவர் குழாத்தினால் புள்ளிகளின் அடிப்படையில் 1-5 வரையான நிலைகள் கணிக்கப்பட்டு பரிசில்கள் பெறுவதற்கு குழந்தைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிகழ்வின் பதிவுகள்...
HAPPY NEW YEAR 2022
ஒளி விழா-2021
எமது மகாதேவா சிறுவர் இல்லத்தின் ஒளிவிழாவானது 26.12.2021 அன்று இல்ல தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் பி.ப 3.00 மணியளவில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது. இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக அருட்பணி எமில்போல் ஆரோபணம் இளைஞர் இல்லத்தின் தற்போதய இயக்குநர் அவர்களுடன் திரு அ.கேதிஸ்வரன் பிரதி திட்டடமில் பணிப்பாளர் கிளிநொச்சி அவர்களும் திரு கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் திரு பத்மசிறி பொருளாலர் மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மற்றும் எம் இல்ல பழைய மாணவர்கள், ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் 2020ம் ஆண்டுக்கான கராத்தேசுற்றுப்போட்டியில் வடமாகாண ரீதியில் பதக்கங்களை பெற்ற எமது இல்ல குழந்தைகளும், மாவட்டரீதியில் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற எமது இல்ல குழந்தை மற்றும் பயிற்சி ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டன.
ஆண்டு இறுதி விழா 2021
மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மேற்பிரிவு மகளிர் இல்லத்தில் 2021 வருட ஒன்று கூடல் நிகழ்வு 24.12.2021ம் திகதி பி.ப 3.30 மணிக்கு நடைபெற்றது.இந்நிகழ்விற்கு இல்லத்தின் தலைவர் மற்றும் செயலாளர் மேற்பிரிவு மகளிர் இல்ல உப நிர்வாக குழு உறுப்பினர்கள், குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வின் போது மேற்பிரிவு இல்ல குழந்தைகளால் விருந்தினர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளையும் அரங்ககேற்றி மகிழ்வித்தனர்.
திருக்குறள் விழா 2021
24.12.2021 வடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் தினணக்கள அனுசரனையில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் நடாத்திய கிளிநொச்சி மாவட்ட திருக்குறள் விழாவில் கலை நிகழ்வுகளின் வரிசையில் எமது இல்ல குழந்தைகளின் மயில் நடனம் அரங்கேறியது. அனைவரையும் மகிழ்வித்து பெரும் பாராட்டினை பெற்றது.
2020ற்கான வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கராத்தே போட்டி16.12.2021 முல்லைத்தீவில் அமைந்துள்ள உள்ளக விளையாட்டுத்திடலில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குகொண்ட சர்வதேச சக்குறா சோட்டோக்கான் கராத்தே சங்கத்தின் (ISSKA) யாழ்/கிளி/முல்லை கராத்தே அணியினர் 9தங்கம்,8வெள்ளி உட்பட 22பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் 3 தங்கம்2வெள்ளிப் பதக்கங்கள் எமது இல்லக் குழந்தைகளுக்கு கிடைத்துள்ளது.
ஆண்டு இறுதி விழா 2021
மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் சிறிய மகளிர் பிரிவினரால் 2021 வருட இறுதி ஒன்று கூடல் நிகழ்வு 19.12.2021ம் திகதி பி.ப 4.00 மணிக்கு நடாத்தப்பட்டது இதில் தலைவர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் போது சிறிய மகளிர் பிரிவினரால் விருந்தினர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.