Categories
News

இல்லக் குழந்தைகளின் புரட்டாதி மாத பிறந்த நாள் விழா-2017

Categories
News

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்- பொதுக் கூட்டம் -2017.09.10

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம்

பொதுக் கூட்டம் -2017.09.10

மேற்படி சிறுவர் இல்லத்தின் பொதுக் கூட்டம் இன்று (10.09.2017) காலை 9:00 மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இறைவணக்கத்துடன் ஆரம்பமாகிய இக் கூட்டத்தில் முதலில் தவத்திரு கணேசானந்த மகாதேவா சுவாமிகள் சமாதி எய்தியமை நினைவு கூரப்பட்டு மௌன அஞ்சலி பிரார்த்தனையும் இடம் பெற்றது.

குறித்த பொதுக் கூட்டத்தில்  உயர் அதிகாரிகளும் ஓய்வு நிலை அதிகாரிகளும் சமூகத் தொண்டர்களுமாக பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் சிறப்புற நடைபெற்றது.

இதில் புதிய உறுப்பினர்கள் சிலர் உள்வாங்கப்பட்டதோடு முக்கிய தீர்மானங்களும் செயற்றிட்டங்களை அமுலாக்கும் விடயங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதோடு கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள் தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றங்களை மேலும் முன்னகர்த்தி செல்லக் கூடிய வழிமுறைகள் தொடர்பாகவும் ஆராய்ந்து அமுலாக்குவதாக உறுதி செய்து கொண்டனர். இக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்களின் புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்.

Categories
News

Categories
News

யாழ் விருது பெற்ற முன்னாள் அரசாங்க அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் தந்தையும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் வடமாகாண பொது நிருவாக உள்ளுராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளருமான உயர்திரு. தி. இராசநாயகம் அவர்கள் யாழ் விருது பெற்றமையை கௌரவிக்கும் வகையில் பணிநயப்பும் “இமயம்” பாராட்டு மலர் வெளியீடும் 19.08.2017 (சனிக்கிழமை) இல்ல வளாகத்தில் முன்னை நாள் கரைச்சி பிரதேச செயலரும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் விசேட ஆணையாளருமான திரு. பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமயில் ஆரம்பமானது. இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள் அனைவரும் விழாநாயகனை மலர் மாலை அணிவித்து வரவேற்பதனையும் மங்கல விளக்கேற்றப்படுவதையும் நிகழ்வுகளின் சில பதிவுகளையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு மாவை. சேனாதிராஜா அவர்கள், மாண்புமிகு சி. சிறிதரன் அவர்கள், வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு அனந்தி சசிதரன் அவர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள் மாண்புமிகு. வை. தவநாதன் அவர்கள், மாண்புமிகு இ. ஜெயசேகரன் அவர்கள், மாண்புமிகு ப. அரியரத்தினம் அவர்கள், வட மாகாண முன்னை நாள் பிரதம செயலாளரும் ஆளுனர் செயலாளரும் ஆலோசகருமான திரு. சி இரங்கராசா அவர்கள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உயர்திரு. சி. சத்தியசீலன் அவர்கள், வட மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் திரு. தி. விஸ்வரூபன் அவர்கள், காணி உரித்து நிர்வாகத் திணைக்கள உதவி ஆணையாளர் திரு. சி. பத்மசிறி அவர்கள், கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. ஆர் .சி. அமல்ராஜ் அவர்கள், கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு. ச. மோகனபவன் அவர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. அ. கேதீஸ்வரன் அவர்கள், கிளிநொச்சி மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. தி. குயின்டஸ் அவர்கள், கரைச்சி பிரதேச செயலர் திரு. கோ. நாகேஸ்வரன் அவர்கள், மூத்த எழுத்தாளர் திரு. நா. யோகேந்திரநாதன் அவர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் விருது பெற்ற முன்னாள் அரசாங்க அதிபரை கௌரவிக்கும் நிகழ்வு

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் தந்தையும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் வடமாகாண பொது நிருவாக உள்ளுராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளருமான உயர்திரு. தி. இராசநாயகம் அவர்கள் யாழ் விருது பெற்றமையை கௌரவிக்கும் வகையில் பணிநயப்பும் “இமயம்” பாராட்டு மலர் வெளியீடும் 19.08.2017 (சனிக்கிழமை) இல்ல வளாகத்தில் முன்னை நாள் கரைச்சி பிரதேச செயலரும் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் விசேட ஆணையாளருமான திரு. பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமயில் ஆரம்பமானது. இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்கள் அனைவரும் விழாநாயகனை மலர் மாலை அணிவித்து வரவேற்பதனையும் மங்கல விளக்கேற்றப்படுவதையும் நிகழ்வுகளின் சில பதிவுகளையும் படங்களில் காணலாம்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு மாவை. சேனாதிராஜா அவர்கள், மாண்புமிகு சி. சிறிதரன் அவர்கள், வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் மாண்புமிகு அனந்தி சசிதரன் அவர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள் மாண்புமிகு. வை. தவநாதன் அவர்கள், மாண்புமிகு இ. ஜெயசேகரன் அவர்கள், மாண்புமிகு ப. அரியரத்தினம் அவர்கள், வட மாகாண முன்னை நாள் பிரதம செயலாளரும் ஆளுனர் செயலாளரும் ஆலோசகருமான திரு. சி இரங்கராசா அவர்கள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உயர்திரு. சி. சத்தியசீலன் அவர்கள், வட மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் திரு. தி. விஸ்வரூபன் அவர்கள்,  காணி உரித்து நிர்வாகத் திணைக்கள உதவி ஆணையாளர் திரு. சி. பத்மசிறி அவர்கள், கிளிநொச்சி மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. ஆர் .சி. அமல்ராஜ் அவர்கள், கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு. ச. மோகனபவன் அவர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. அ. கேதீஸ்வரன் அவர்கள், கிளிநொச்சி மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. தி. குயின்டஸ் அவர்கள், கரைச்சி பிரதேச செயலர் திரு. கோ. நாகேஸ்வரன் அவர்கள், மூத்த எழுத்தாளர் திரு. நா. யோகேந்திரநாதன் அவர்கள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Categories
News

95வது சர்வதேச கூட்டுறவாளர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கூட்டுறவுச் சபை மண்டபத்தில் 15.08.2017 செவ்வாய்க்கிழமை இன்று நடைபெற்ற மாபெரும் கூட்டுறவாளர்கள் ஒன்று கூடல் நிகழ்வில் பல பிரமுகர்களின் வாழ்த்துடனும் கௌரவிப்புடனும் முதன்மைக் கூட்டுறவாளர் விருது எமது இல்லத் தலைவரும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரச அதிபருமான உயர்திரு. தி. இராசநாயகம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வின் பதிவுகள் சில

Categories
News

எமது இல்லக் குழந்தைகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கான நிதியுதவி கோருதல்

Categories
News

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் மற்றும் கரிகணன் (தனியார்) நிறுவனமும் இணைந்து நடத்திய ஆடிப்பிறப்பு விழா-2017 17.07.2017 அன்று எமது மகாதேவா சிறுவர் இல்லத்தில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவி பேராசிரியை திருமதி மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதன்போது மங்கல விளக்கேற்றப்படுவதையும் இல்லக் குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் கலந்து கொண்டிருந்த எமது இல்லத் தலைவர் உயர்திரு. தி. இராசநாயகம், பிரமுகர்கள் மற்றும் இல்லக் குழந்தைகளையும் படங்களில் காணலாம். வாழ்நாள் பேராசிரியர் (யாழ் பல்கலைக்கழகம்) திரு. அ. சண்முகதாஸ் அவர்கள் ஆடிப்பிறப்பு பற்றிய விரிவுரையை நிகழ்த்தினார். யாழ் போதனா மருத்துவமனை அத்தியட்சகர் டாக்டர் திரு. த. சத்தியமூர்த்தி சிறப்புரையாற்றினார். இந் நிகழ்வில் சைவநெறி தழைத்தோங்கவும், தமிழ் மொழி செழித்து வளரவும் பெரும் பணியாற்றிய நாவலர் பெருமானின் சிலை சகல பாடசாலைகளுக்கும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இச் சிலைகளை கரிகணன் நிறுவனத்தினர் அன்பளிப்புச் செய்திருந்தனர். இறுதியில் குழந்தைகளுக்கும் விருந்தினர்களுக்கும் கூழ், கொழுக்கட்டை வழங்கப்பட்டு விழா இனிதே இறை வணக்கத்துடன் நிறைவெய்தியது.

Categories
News

வட மாகாண கராத்தே சுற்றுப் போட்டியில் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்கள் சாதனை

Categories
News

வட மாகாண கராத்தே சுற்றுப் போட்டியில் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்கள் சாதனை

Categories
News

இல்லக் குழந்தைகளின் வைகாசி மாத பிறந்த நாள் விழா -2017