முகாமைக்குழுக்கூட்டம் 23.03.2024
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த முகாமைக்குழுக்கூட்டம் இல்லத்தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் 23.03.2024 காலை 10.30மணிக்கு சிறுவர் இல்ல திறன் வகுப்பறை மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது
குறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றது இல்லத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்துதல் தொடர்பாகவும் முக்கியமான ஆலோசனை களுடனான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன அதன் பதிவுகள் சில
Author: webadmin
15.03.2024 அன்று கிளி/கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியை முன்னிட்டு நடைபெற்ற வீதியோட்ட நிகழ்வில் ஆண்கள் பிரிவில் எமது புதுமுறிப்பு ஆண்கள் இல்ல மாணவர்கள் முறையே 1,,3 ஆகிய இடங்களையும் பெண்கள் பிரிவில் எமது இல்ல மாணவி 3வதுஇடங்களையும் பெற்று எமது இல்லத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்….
1- டக்சன்
3- . நிருஐன்
3- பிரகாசினி
முகாமைக்குழுக்கூட்டம் 23.01.2024
முகாமைக்குழுக்கூட்டம் 23.01.2024
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த முகாமைக்குழுக்கூட்டம் இல்லத்தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் 23.02.2024 காலை 10.30மணிக்கு சிறுவர் இல்ல திறன் வகுப்பறை மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது
குறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றது இல்லத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்துதல் தொடர்பாகவும் முக்கியமான ஆலோசனை களுடனான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன அதன் பதிவுகள் சில
கல்விச்சுற்றுலா 18.02.2024
வருடாந்த கல்விச்சுற்றுலா..
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் இந் வருடத்தின் முதலாவது கல்விச் சுற்றுலா நேற்றைய தினம் ( 18.2.2024) இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் பிரதான தொல்லியல் பிரதேசங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களான திருக்கேதீச்சரம் ,மடு மாதா தேவாலயம் ஆகியவற்றை தரிசிப்பதாக இச்சுற்றுலா திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கமைவாக இல்லக்குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இல்லத் தலைவர், பணிப்பாளர், பணியாளர்கள் மற்றும் முகாமைக் குழு உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். இச்சுற்றுலாவில் இல்லக்குழந்தைகள் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பதிவுகள் சில
தீபத்திருநாள் 26.12.2024
26.11.2023 அன்று எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல சிறார்களால் கார்த்திகைத் தீபத்திருநாள் தீபங்கள் ஏற்றி மகிழ்வுடன் கொண்டாடப்பட்டதன் பதிவுகள்
இல்ல பிள்ளைகள் ஏழு பேருக்கான பூப்புனித நீராட்டு விழா 09.11.2023
எமது இல்லத்தினால் பராமரிக்கப்பட்டு வரும் ஏழு சிறுமிகளுக்கான பூப்புனித நீராட்டு விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக சமய சம்பிரதாய கலாச்சார விழுமியங்களுக்கேற்ப சுப நேரத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில் இல்லத்தின் நலன்விரும்பிகள், நன்கொடையாளர்கள், திணைக்களங்களுடைய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் இல்லத்தினுடைய குழந்தைகள் பணியாளர்கள், பணிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டதுடன் குழந்தைகளுக்கு வாழ்த்துகளையும் ஆசிர்வாதத்தினையும் வழங்கி மகிழ்ந்திருந்தனர்
இந் நிகழ்விற்கு சகல வழிகளிலும் நிதி உதவிகளையும் ஆதரவினையும் வழங்கியிருந்த நல் உள்ளம் கொண்ட எம் நன்கொடையாளர்களுக்கு எமது இதய பூர்வமான நன்றிகளையும் பாராட்டுக்களினையும் இல்ல குழந்தைகள் சார்பாக தெரிவித்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்
அதன் பதிவுகள் சில
இன்றைய தினம் (07.02.2024) எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல நாகபூசணி அறிவக முன்பள்ளியின் பொங்கல் விழாவானது மிகவும் சிறப்புற நடைபெற்றது இவ்விழாவில் முன் பள்ளியினை அமைத்து தந்த திரு திருமதி சிவகுமார் நாகேஸ்வரி குடும்பத்தினரும் மற்றும் டென்மார்க்கில் இருந்து வருகை தந்த திரு திருமதி ஜவீனன் ஆன் தம்பதியினரும் மற்றும் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல பிரதம நிறைவேற்று அலுவலர் பணியாளர்கள் ஆசிரியர்கள் முன்பள்ளி குழந்தைகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் இவ்விழாவின் போது திரு திருமதி சிவகுமார் நாகேஸ்வரி குடும்பத்தினரால் முன்பள்ளி பிள்ளைகளுக்கான முன்பள்ளி சீருடை மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டன.
மரம் நாட்டல் நிகழ்வு 07.02.2024
07.02.2024. அன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லமும் இணைந்து சிறுவர் இல்ல வளாகத்தில் பிள்ளைகளின் நலன் கருதி விளையாட்டு மைதானத்தினை சுற்றி புங்கை மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு சிறுவர் இல்ல தலைவர் திரு .ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்
திரு . மரியதாசன் ஜெகூ அவர்கள் முதல் மரக்கன்றினை நாட்டி ஆரம்பித்துவைத்ததுடன் வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர்
திருமதி செந்தில் குமரன் சுகந்தி மற்றும் வடமாகாண உதவி பிரதம செயலாளர் திருமதி அனற் அன்ரனிடினேஸ் , வடமாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடல் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் திரு.கோ. கிருஷ்ண குமார் . சுகாதார அமைச்சின் உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்கள், இல்லத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள்,இல்ல சிறார்கள் ஆகியோரால் நாட்டப்பட்டது
நல்ல சுகத்தோடும் நீண்ட ஆயுளோடும் புன்னகை நிறைந்த முகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இல்லத்தலைவர் #திரு .ச . மோகனபவன் அவர்கள்
வாழ்த்துவது .._ இல்லப்பணிப்பாளர்கள் இல்ல பணியாளர்கள்
இல்லக்குழந்தைகள்
See Insights and Ads
All reactions:
2828