26.11.2023 அன்று எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல சிறார்களால் கார்த்திகைத் தீபத்திருநாள் தீபங்கள் ஏற்றி மகிழ்வுடன் கொண்டாடப்பட்டதன் பதிவுகள்





See Insights and Ads
சர்வதேச சக்குறா சோட்டோகான் கராத்தே சங்கத்தினால் கிளிநொச்சி பொது உள்ளக விளையாட்டரங்கில் 11.12.2023. அன்று சங்கத்தின் பிரதம ஆசிரியர் சிகான் S. விஜயராஜ் தலைமையில் சென்சே ஜெயசுந்தரா, சென்சே சிவபாலன், சென்சே ரவிபவன் , சென்சே ஜெயராஜ் ஆகிய கராத்தே ஆசிரியர்களால் நடாத்தப்பட்ட கராத்தே பட்டிதரத்திற்கான பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சார்ந்த பல மாணவர்கள் பங்குபற்றினர்
இதில் கலந்து கொண்ட எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல கராத்தே அணியினர் சிறந்த பெறுபேறுகள் பெற்று அதற்கான சான்றிதழைப் பெற்று தமது பட்டி நிலைகளை உயர்த்தியுள்ளனர்
See Insights and Ads
All reactions:
30You and 29 others
13.12.2023
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல 2021 ம் ஆண்டு க.பொ.த சாதரன தரப் பரீட்சை எழுதிய பின்னர் எமது பிள்ளைகளுக்கு பாடசாலை விடுமுறையில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டது அந்த வகையில் தையல் தொழிற்பயிற்சியைப் பெற்று சித்தியீட்டய 10 மாணவர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்திரால் NVQ3 தர சான்றிதழ் வழங்கப்பட்டது அதன் பதிவுகள் சில
See Insights and Ads
All reactions:
50You and 49 others
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் எமது மேற்பிரிவு பெண்கள் இல்லத்திற்கு 13.12.2023 அன்று மாலை 3.00 மணிக்கு வைத்தியர் திரு ரஞ்சன் அவர்கள் வருகை தந்து போசாக்கு மற்றும் பெண்ணியல் தொடர்பான விடயம் சார்ந்த கருத்தரங்கை நடாத்திருந்தார்
இக் கருத்தரங்கு எமது இல்ல பிள்ளைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது அதன் பதிவுகள் சில
See Insights and Ads
மது மகாதேவ சிறுவர் இல்லத்தின் நாக பூசணி அறிவகமுன்பள்ளி ஒளி விழா நிகழ்வு 22.12.2023 அன்று சிரேஸ்ர உபதலைவர் திரு அ.கனகரத்தினம் ஐயா தலைமையில் மு.ப 10 மணியளவில் ஆரம்பமாகியது
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக அருட் சகோதரி இவோன் ரோச் தலைவி திருக்குடும்ப கன்னியர் இல்லம் அவர்களும், திருமதி மேரி ஜாக்குலின் குலாஸ், ஆசிரியர் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அவர்களும் கலந்து கொண்டனர். அத்துடன் எமது இல்ல பிரதம நிறைவேற்று அலுவலர் திரு தே.சுபாகரன் ,கல்வி முகாமையாளர் திரு MCL மனுவல் அவர்கள் மற்றும் பெற்றோர்கள் ,ஆசிரியர்கள், முன்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் முன்பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
எமது மகாதேவா சுவாமிகள் மகளிர் இல்லத்தின் உப முகாமைக்குழு உறுப்பினரும் நலன் விரும்பியும் இல்லக் குழந்தைகளினதும் சிறுவர் இல்லத்தினதும் வளர்ச்சிக்காக மிகவும் அர்ப்பணிப்போடு தன்னலமற்ற சேவையாற்றி மீளாதுயில் கொண்டுள்ள அமரர் செல்வராசா.குமாரவேல் (பாவு) அவர்கள் 27.01.2024 இன்று இறைவனடி சேர்ந்தமையினையிட்டு ஆறாத்துயரடைகின்றோம்.
அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அன்னாரது ஆத்மா எல்லாம் வல்ல உருத்திரபுரிஸ்வரர் பாதங்களில் சங்கமமாகி நித்திய வாழ்வு பெறவும் பிரார்த்திக்கின்றோம்
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதந்த முகாமைக்குழுக்கூட்டம் இல்லத்தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் 26.12.2023 காலை 10.30மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது
குறித்த கூட்டத்தில் எமது முகாமைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றது இல்லத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பாகவும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளினை மேம்படுத்துதல் தொடர்பாகவும் முக்கியமான ஆலோசனை களுடனான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன அதன் பதிவுகள் சில
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திலிருந்து 2023 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வையிட்டு 27.12.2023 அன்று எமது மாகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல சர்வசக்தி அம்மன் ஆலயத்தில் பொங்கள் நிகழ்வுகளுடன் பூஜை இடம்பெற்று பின்னர் குழந்தைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் இல்ல தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எமது இல்ல பணிப்பாளர்கள் , பணியாளர்கள் , ஆசிரியர்கள் கலந்து கொண்டு பிள்ளைகளை வாழ்த்தி ஆசி வழங்கினர்.
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் இடைநிலை மற்றும் மேற்பிரிவு மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழக துறைசார் விரிவுரையாளர்களால் திறன் விருத்தி பயிற்சி கருத்தரங்கு 29.12.2023 அன்று மதியம் 2 மணிக்கு இல்லத்தில் முதற்கட்டமாக நடைபெற்றது இக் கருத்தரங்கு எமது இல்ல பிள்ளைகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் ஊக்கமளிப்பதாகவும் அமைந்தது அதன் பதிவுகள் சில
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் ஜப்பசி, கார்த்திகை
,மார்கழி
மாதங்களில் பிறந்தநாள்
கொண்டாடும் குழந்தைகளுக்கான பிறந்தநாள்
நிகழ்வானது 31.12.2023 ஞாயிற்றுக்கிழமை எமது இல்ல தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் பி.ப 3.00
மணிக்க
எமது புதுமுறிப்பு ஆண்கள் சிறுவர் இல்ல வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.இளவேந்தி நிர்மலராஜ் அவர்களும் திரு அ.கனகரத்தினம் சிரேஷ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் இல்லச்செயலாளர் திரு.கு.பகீரதன் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர் திருமதி கிருபா ஜெயக்குமார் மற்றும் திரு.செந்தூரன் அவர்களும் மற்றும் பழைய மாணவர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் எமது இல்ல பணியாளர்கள் இல்ல குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டு இந் நிகழ்வினை சிறப்பித்தனர்.
நிகழ்வின் குழந்தைகளுக்கு இனிப்பூட்டி வாழ்த்தி மகிழ்வித்ததோடு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.அத்தோடு விருந்தினர்களை கெளரவித்ததோடு இல்லக்குழந்தைகளது கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றது.அதன் சில பதிவுகள்:-