Category: News
பான்ட் இசைக்கருவி கொள்வனவு
மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் குழந்தைகளின் நிகழ்வுகளின் போது பயன் படுத்துவதற்காக பான்ட் இசைக்கருவி தொகுதி கொள்வனவு.
மகாதேவ சுவாமிகள் சிறுவர் இல்ல குருகுல முன்பள்ளியில் பூங்கா திருத்த வேலைக்காக ஒருலட்சம் வேலைதிட்டத்தின் கீழ் ஜெயந்தி நகர் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட மூன்று மில்லியன் ரூபாவில் 03 இலட்சம் ரூபா எமது முன்பள்ளி பூங்கா திருத்தத்திற்காக பொது அமைப்புக்களால் வழங்கப்படுவதற்கான ஆரம்பவிழா இடம்பெற்றது. இவ்விழாவில் இந்து ஆரம்ப வித்தியாலய முதல்லர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுத்தி உத்தியோகத்தர் , விளையாட்டுக் கழகத்தினர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பிறந்தநாள் விழா
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் COVID-19 காரணமாக தடைப்பட்டிருந்த பிறந்தநாள் கொண்டாட்டம் (கடந்த 10ம் மாதம் தொடக்கம் 2022-தை வரையான பிறந்தநாள் நிகழ்வானது) 30.01.2022 நேற்றய தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக வைத்திய கலாநிதிகள் திரு.திருமதி இ.கிஸ்ணலிங்கம் அனுசா தம்பதியினர் (மாவட்ட வைத்தியசாலை-கிளிநொச்சி) தமது குழந்தைகளுடன் கலந்து சிறப்பித்தனர் அத்துடன் சிறப்பு விருந்தினராக எமது இல்லத்தின் நீண்டகாலமாக முகாமைக்குழுவில் பதவி வகிக்கும் இல்லத்தின் உபதலைவரான திரு.S.யசோதரன் அவர்களும் (தொழிலதிபர்-கிளிநொச்சி மாவட்டம்) கலந்து சிறப்பித்தனர்.
விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.
குழந்தைகளுக்கு பரிசில்களும், பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன. மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
தைப்பொங்கல்
தைப்பொங்கல் தினத்தையிட்டு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் குருகுல முன்பள்ளியில் பொங்கல் நிகழ்வானது சிறப்பான முறையில் இடம் பெற்றது.






இலங்கை கராத்தே சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட 2021இற்கான தேசியரீதியிலான கராத்தே குமித்தே சுற்றுப்போட்டி 22,23 .01.2022ஆம் திகதிகளில் கொழும்பு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் வடமாகாணம் சார்பில் பங்கு பற்றிய எமது இல்லக்குழந்தைகள் தங்கப்பதக்கம் உட்பட வெண்கலப்பதக்கங்கள், வெள்ளிப்பதக்கங்கள் அடங்களாக 12 பதக்கங்களினைப் பெற்று எமது இல்லத்திற்கும் வடமாகாணத்திற்கும் பெருமைசேர்த்துள்ளனர்.




முகாமைக் குழுக்கூட்டம்- 22.01.2022
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (January-2022) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் (22.01.2022) மாலை 2:00 மணிக்கு சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது. குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகள், இல்லங்களின் செயற்ப்பாடுகள் தொடர்பில் எடுக்கப்படவேண்டிய முன்னேற்றகரமான திட்டங்கள், நிர்வாகச்செயற்பாடுகள் தொடர்பான முக்கியமான தீர்மானங்கள் என்பனவற்றினை சபை ஆராய்ந்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளுடன் கூட்டம் பி.ப. 4.30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.




விளையாட்டுப் பொருட்கள் அன்பளிப்பு
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் இல்லக்குழந்தைகளுக்கு தேவையான பெருவிளையாட்டுக்கான விளையாட்டுப்பொருட்களை தமிழ்மணி நிறுவன உரிமையாளர் திரு சு.சுகுணன் அவர்களால் இல்லக்குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.





2021 இற்கான பொருள் கணக்கெடுப்பின் பின்னரான ஏலவிற்பனை
பட்டிப்பொங்கல்
பட்டிப்பொங்கல் தினத்தையிட்டு எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திலுள்ள பண்னணயில் பட்டிப்பொங்கல் நிகழ்வானது சிறப்பான முறையில் இடம்பைற்றது.