Categories
News

புதிர் வழங்கும் நிகழ்வு

எமது இல்லக் குழந்தைகளின் உணவுக்கென நன்கொடையாளர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நெற்காணிகளில் கடந்த வருடம் கால போக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு 16.02.2019 இன்று  புதிய நெல்லில் சமைக்கப்பெற்ற புதிர்ப்பொங்கல் இல்லக் குழந்தைகளுக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் இல்லத்தலைவர் பொன். நித்தியானந்தம் ஐயா மற்றும் இல்லத்தின் உபதலைவர் திரு. அ. கனகரத்தினம் ஐயா அவர்களையும் இல்லப் பணியாளர்களையும்  படத்தில் காணலாம்.

Categories
News

2018 ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மற்றும் 2019 தை மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் விழா

 

கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 2018 ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மற்றும் 2019 தை மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் விழா 15.02.2019 வெள்ளிக்கிழமை இன்று இடம்பெற்றது. இதன்போது வருகை தந்திருந்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை இல்லக்குழந்தைகள் மலர்மாலை அணிவித்து வரவேற்பதனையும் மங்கல விளக்கேற்றப்படுவதையும் குழந்தைகளுக்கு இனிப்பூட்டுவதையும் இல்லக்குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. சின்னையா வதனகுமார் (பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, கிளிநொச்சி) அவர்களும் மற்றும் எமது இல்ல கௌரவ முகாமைக்குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Categories
News

முகாமைக் குழுக்கூட்டம்- 27.01.2019

முகாமைக் குழுக்கூட்டம்- 27.01.2019

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (தை-2019) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமையில் இன்று (27.01.2019) காலை 10:30 மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

குறித்த கூட்டத்தில்  எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் சிறப்புற நடைபெற்றது.

வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) திரு. ஆர். பத்மநாதன் அவர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கிய தீர்மானங்களும் செயற்றிட்டங்களை அமுலாக்கும் விடயங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதோடு இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்களின் புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்.

 

Categories
News

நெற் புதிர் எடுக்கும் நிகழ்வு-21.01.2019

எமது இல்லக் குழந்தைகளின் உணவுக்கென நன்கொடையாளர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நெற்காணிகளில் கடந்த வருடம் கால போக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு தைப்பூச நன்னாளாகிய இன்று 21.01.2019 அறுவடை ஆரம்ப நிகழ்வு (நெற் புதிர் எடுக்கும் நிகழ்வு) இடம்பெற்றது. இவ் ஆரம்ப நிகழ்வில் இல்லத்தலைவர் பொன். நித்தியானந்தம் ஐயா மற்றும் இல்லத்தின் கெளரவ முகாமைக்குழு உறுப்பினர் திரு. கு. கிட்ணசாமி அவர்களையும் பிரதம நிறைவேற்று அலுவலர் திரு. தே. சுபாகரன் அவர்களையும் இல்லப் பணியாளர்களையும்  படத்தில் காணலாம்.

Categories
News

எமது இல்லத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வின் சில பதிவுகள்-16.01.2019

Categories
News

எமது இல்லத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வின் பதிவுகள் சில……

16

Categories
News

வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தினரின் அன்பளிப்பு

வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தினரின்  ஏற்பாட்டில் புலம்பெயர் வாழ் வல்வெட்டி உறவுகள் மற்றும் வல்வெட்டி உள்ளுர் அன்பர்களாலும் எமது இல்லக் குழந்தைகளின் நலன் கருதி 30.12.2018 அன்று அத்தியாவசிய பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.

படத்தில் எமது இல்லத் தலைவர் திரு. பொன். நித்தியானந்தம் ஐயாவுடன் வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்

Categories
News

கிளிநொச்சி கால்நடை உற்பத்தி சுகாதார வைத்திய அதிகாரி கலாநிதி சுப்பிரமணியம் கஜரஞ்சன் அவர்களின் ஏற்பாட்டில் 21.12.2018 அன்று தென்னிலங்கையைச் சேர்ந்த கால்நடை வைத்தியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பலரும் எமது இல்லத்திற்கு வருகை தந்திருந்தனர். இவர்கள் எமது இல்லத்தின் பல இடங்களையும் பார்வையிட்டிருந்ததுடன் கறவைப்பசு பண்ணையினைப் பார்வையிட்டு பாராட்டிச் சென்றிருந்தனர். இதன் போது எடுக்கப்பட்ட படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்.

Categories
News

கல்விக் குழுக்கூட்டம்- 30.12.2018

கல்விக் குழுக்கூட்டம்- 30.12.2018

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (மார்கழி-2018) கல்விக் குழுக்கூட்டம் தலைவர் திரு.பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமையில் இன்று (30.12.2018) காலை 9:00  மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

குறித்த கூட்டத்தில் எமது இல்ல கல்விக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் சிறப்புற நடைபெற்றது. இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னை நாள் கல்விப் பணிப்பாளர் திரு. க. முருகவேல் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதில் இவ்வருட கல்வி வளர்ச்சி பற்றியும் கல்வி அபிவிருத்திக்கான எதிர்கால செயற்றிட்டங்கள் சம்பந்தமான விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதோடு இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்களின் புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்.

 

Categories
News

முகாமைக் குழுக்கூட்டம்- 30.12.2018

முகாமைக் குழுக்கூட்டம்- 30.12.2018

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (மார்கழி-2018) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமையில் இன்று (30.12.2018) காலை 10:30 மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் சிறப்புற நடைபெற்றது.

இதில் முக்கிய தீர்மானங்களும் செயற்றிட்டங்களை அமுலாக்கும் விடயங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதோடு இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்களின் புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்.