மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் சிறிய மகளிர் பிரிவினரால் 2021 வருட இறுதி ஒன்று கூடல் நிகழ்வு 19.12.2021ம் திகதி பி.ப 4.00 மணிக்கு நடாத்தப்பட்டது இதில் தலைவர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் போது சிறிய மகளிர் பிரிவினரால் விருந்தினர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
முகாமைக் குழுக்கூட்டம்- 18.12.2021
முகாமைக் குழுக்கூட்டம்- 18.12.2021
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (December-2021) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் (18.12.2021) காலை 10:00 மணிக்கு சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்பகூட்டம் சிறப்புற நடைபெற்றது.
இதில் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பது தொடர்பாகவும் முக்கிய தீர்மானங்களும் செயற்றிட்டங்களை அமுலாக்கும் விடையங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.




கல்விக் குழுக்கூட்டம்- 24.02.2019
கல்விக் குழுக்கூட்டம்- 24.02.2019
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (மாசி-2019) கல்விக் குழுக்கூட்டம் தலைவர் திரு.பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமையில் இன்று (24.02.2019) காலை 9:00 மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
குறித்த கூட்டத்தில் எமது இல்ல கல்விக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் சிறப்புற நடைபெற்றது.
இதில் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால செயற்றிட்டங்கள் சம்பந்தமான விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதோடு இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்களின் புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்.
புதிர் வழங்கும் நிகழ்வு
எமது இல்லக் குழந்தைகளின் உணவுக்கென நன்கொடையாளர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நெற்காணிகளில் கடந்த வருடம் கால போக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு 16.02.2019 இன்று புதிய நெல்லில் சமைக்கப்பெற்ற புதிர்ப்பொங்கல் இல்லக் குழந்தைகளுக்கு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் இல்லத்தலைவர் பொன். நித்தியானந்தம் ஐயா மற்றும் இல்லத்தின் உபதலைவர் திரு. அ. கனகரத்தினம் ஐயா அவர்களையும் இல்லப் பணியாளர்களையும் படத்தில் காணலாம்.
கிளிநொச்சி ஜெயந்திநகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 2018 ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மற்றும் 2019 தை மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் விழா 15.02.2019 வெள்ளிக்கிழமை இன்று இடம்பெற்றது. இதன்போது வருகை தந்திருந்த பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களை இல்லக்குழந்தைகள் மலர்மாலை அணிவித்து வரவேற்பதனையும் மங்கல விளக்கேற்றப்படுவதையும் குழந்தைகளுக்கு இனிப்பூட்டுவதையும் இல்லக்குழந்தைகளின் கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம். இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. சின்னையா வதனகுமார் (பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, கிளிநொச்சி) அவர்களும் மற்றும் எமது இல்ல கௌரவ முகாமைக்குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முகாமைக் குழுக்கூட்டம்- 27.01.2019
முகாமைக் குழுக்கூட்டம்- 27.01.2019
எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (தை-2019) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.பொன். நித்தியானந்தம் அவர்களின் தலைமையில் இன்று (27.01.2019) காலை 10:30 மணிக்கு சிறுவர் இல்ல கேட்போர் கூடத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் சிறப்புற நடைபெற்றது.
வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) திரு. ஆர். பத்மநாதன் அவர்கள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கிய தீர்மானங்களும் செயற்றிட்டங்களை அமுலாக்கும் விடயங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதோடு இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்களின் புகைப்படங்கள் இத்துடன் இணைத்துள்ளோம்.
நெற் புதிர் எடுக்கும் நிகழ்வு-21.01.2019
எமது இல்லக் குழந்தைகளின் உணவுக்கென நன்கொடையாளர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நெற்காணிகளில் கடந்த வருடம் கால போக நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு தைப்பூச நன்னாளாகிய இன்று 21.01.2019 அறுவடை ஆரம்ப நிகழ்வு (நெற் புதிர் எடுக்கும் நிகழ்வு) இடம்பெற்றது. இவ் ஆரம்ப நிகழ்வில் இல்லத்தலைவர் பொன். நித்தியானந்தம் ஐயா மற்றும் இல்லத்தின் கெளரவ முகாமைக்குழு உறுப்பினர் திரு. கு. கிட்ணசாமி அவர்களையும் பிரதம நிறைவேற்று அலுவலர் திரு. தே. சுபாகரன் அவர்களையும் இல்லப் பணியாளர்களையும் படத்தில் காணலாம்.
16
வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தினரின் ஏற்பாட்டில் புலம்பெயர் வாழ் வல்வெட்டி உறவுகள் மற்றும் வல்வெட்டி உள்ளுர் அன்பர்களாலும் எமது இல்லக் குழந்தைகளின் நலன் கருதி 30.12.2018 அன்று அத்தியாவசிய பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
படத்தில் எமது இல்லத் தலைவர் திரு. பொன். நித்தியானந்தம் ஐயாவுடன் வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்